திண்டுக்கல், கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில்  20-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை நீரில் கரைப்பதற்கான ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தொடங்கிய விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் வே.தர்மா தொடக்கி வைத்தார். திண்டுக்கல் கோட்டை குளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 12 சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன.
வடமதுரையில்: வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் 15-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதில், 14 சிலைகள்  ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. வடமதுரை அடுத்துள்ள தும்மலக்குண்டு நரிப்பாறை பகுதியில் அமைந்துள்ள நீர்நிலையில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வேடசந்தூரில்: வேடசந்தூர் வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வேடசந்தூர் முக்கிய வீதிகள் வழியாக கொண்டுசெல்லப்பட்டு கொடகனாற்றில் கரைக்கப்பட்டன. 
அதனைத் தொடர்ந்து ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக தேசிய பொதுச் செயலர் ஹெச்.ராஜா, இந்து முன்னணியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் விஎஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.  இந்நிலையில் அனைத்து விநாயகர் சிலைகளும் திங்கள்கிழமை டிப்போ பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக லாஸ்காட்சாலைப் பகுதியிலுள்ள நீரோடைக்கு கொண்டு செல்லப்பட்டு  கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com