பழனியில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்: இஸ்லாமியர்கள் வரவேற்பு 

பழனியில் திங்கள்கிழமை நடைபெற்ற  விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.

பழனியில் திங்கள்கிழமை நடைபெற்ற  விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.
   பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை அகில பாரத இந்து மகாசபா, சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சி என மூன்று இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பவனி நடைபெற்றது. 
முற்பகலில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை மாவட்ட நிர்வாகி சிவபாலமூர்த்தி துவக்கி வைத்தார்.  ஊர்வலத்தில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பங்கேற்றன.  
  மாலையில் சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இணைந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று சண்முகநதியில் கரைத்தனர். 
 பழனி பாதவிநாயகர் கோயிலில் முன்பாக துவங்கிய பேரணியில் 160-க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலம் பேருந்து நிலையத்தை அடைந்த போது வர்த்தகர் சங்க நிர்வாகி ஹக்கீம் ராஜா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலத்தை நடத்தி சென்ற இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ரவிக்குமார், ரவிபாலன், சிவசேனா மாவட்ட செயலாளர் அசோக், பாலாஜி  உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.  
அப்போது ஊர்வலக்குழுவினர் இந்து, முஸ்லிம் ஒற்றுகை ஓங்குக என கோஷம் எழுப்பினர்.  
  ஊர்வலத்தை முன்னிட்டு  சின்னப்பள்ளிவாசல் அருகே ஏடிஎஸ்பி., பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com