புரட்டாசி மாத தொடக்கம்:  கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு பபெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு மேற்கொண்டனர்.

புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு பபெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு மேற்கொண்டனர்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் வரும் போது பலரும் இறைச்சியை தவிர்த்து பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வது வழக்கம்.  இதன்படி திங்கள்கிழமை புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு தனுர் பூஜை, யாகம் நடைபெற்றது.  
தொடர்ந்து மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில்களில் ஏராளமானோர் பெருமாளுக்கு மலர்கள், துளசி வைத்து வழிபாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com