தும்மலம்பட்டியில் குரங்குகள் தொல்லை

பழனியை அடுத்த தும்பலப்பட்டி கிராமத்தில் திடீரென புகுந்துள்ள குரங்குகள் பயிர்கள் மற்றும் மரங்களுக்கு சேதம்

பழனியை அடுத்த தும்பலப்பட்டி கிராமத்தில் திடீரென புகுந்துள்ள குரங்குகள் பயிர்கள் மற்றும் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் செய்துள்ளனர்.
  திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தும்பலப்பட்டி கிராமத்தில் பலநூறு ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
 சோளம், கம்பு, முருங்கை, தென்னை என அப்பகுதியில் பல்வேறு விவசாயப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.  
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் ஐம்பதுக்கு மேற்பட்ட குரங்குகள் வந்து  தென்னை மரங்களில் தங்கி காய்களை பறித்து வீசுவதாலும்,  விவசாய பயிர்களை சேதம் செய்வதாலும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். 
 இவை எங்கிருந்து வந்தன என தெரியாத நிலையில் அவற்றை விரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சமூக விரோதிகளால் குரங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் இது குறித்து பழனி வனத்துறையினருக்கு பலமுறை மனு 
அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.  ஆகவே, வனத்துறையினர் உடனடியாக தங்கள் தோட்டங்களில் உள்ள குரங்குகளை கூண்டு மூலம் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com