இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவேந்தல் கூட்டம்

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவேந்தல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவேந்தல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
திண்டுக்கல் மாவட்ட பட்டாளி மக்கள் கட்சி சார்பில், 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 31ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
 திண்டுக்கல் அடுத்துள்ள நல்லாம்பட்டி காளியம்மன் கோயில் கலையரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலர் இரா. பரசுராமன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநிலச் செயலர் பு.தா. அருள்மொழி பேசியதாவது:
இடஒதுக்கீடு பெறுவதற்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும், போராளிகளின் உயிர் தியாகம் குறித்தும், இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே, இந்த நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. 
இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கானது அல்ல. இதனை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே, பாட்டாளி மக்கள் கட்சியில் வன்னியர் அல்லாத பிற சாதியினருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார். 
கூட்டத்தில், பாமக மாநில துணைத் தலைவர் வெள்ளைகோபால், மாநில துணை அமைப்புச் செயலர் க. ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் ரெ. திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com