வடமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் குவாரி நடத்திய திமுகவினர் 3 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் குவாரி நடத்திய திமுக பிரமுகர்கள் 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் குவாரி நடத்திய திமுக பிரமுகர்கள் 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 திண்டுக்கல், தாடிக்கொம்பு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பிலான மணல், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருடப்படுவதாக முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பொதுமக்கள் தரப்பில் மணல் திருட்டு குறித்து புகார் அளித்தபோதிலும், கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். 
 இந்நிலையில், வடமதுரை சுற்றுப்புற பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார், குளத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனிச்சாமி, பெரும்புள்ளியைச் சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோர் மீது வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
  அதன்பேரில், அனுமதியின்றி மணல் குவாரி நடத்தியதாக அவர்கள் 3 பேர் மீதும் வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் திமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் அதிர்ச்சி: மணல் திருட்டை தடுக்கக் கோரி திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி போட்டி அளித்ததன் எதிரொலியாக, திமுக பிரமுகர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்த வடமதுரை ஒன்றிய திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com