அறிவியல் கணித சுற்றுப்புறக் கண்காட்சிப் போட்டி: மாநிலப் போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான ஜவாஹர்லால் நேரு அறிவியல் கணித சுற்றப்புறக் கண்காட்சிப் போட்டிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின்

மாநில அளவிலான ஜவாஹர்லால் நேரு அறிவியல் கணித சுற்றப்புறக் கண்காட்சிப் போட்டிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் 7 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில், 46 ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல் கணித சுற்றுப்புறக் கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான இப்போட்டிகளில், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலிருந்து வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்துகொண்டனர்.
     போட்டிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.சொ. சாந்தகுமார் தொடக்கி வைத்தார். கணிதக் கருத்தரங்கம், ஒரு மாணவர் ஒரு படைப்பு, இரு மாணவர் ஒரு படைப்பு, அப்துல் கலாம் அறிவியல் கண்காட்சி என 4 பிரிவுகளில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர் படைப்பு என்ற பிரிவில் ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன.
     கணிதக் கருத்தரங்கில், எம். ஹரிணி (அண்ணாமலையார் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி) முதலிடமும், ஒரு மாணவர் ஒரு படைப்பு பிரிவில் எஸ். கோபி (காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி) முதலிடமும், கே. சுரேஷ்கோபி (பழனி நகரவை மேல்நிலைப் பள்ளி) 2ஆவது இடமும், இரு மாணவர் ஒரு படைப்பு பிரிவில் எம். நித்தியானந்தம் மற்றும் எம். லிங்கேஸ்வரன் (செக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி) முதலிடமும், அப்துல்கலாம் அறிவியல் கண்காட்சியில் வி. பவித்ரா மற்றும் ஆர். பவித்ராஸ்ரீ (புனித வளனார் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி) முதலிடமும் மற்றும் ஆசிரியர் படைப்பு பிரிவில் எம்.ஜி. சுஜாதா (அண்ணாமலையார் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி) முதலிடமும் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
    இதில், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த  தலைமையாசிரியர்கள்  போட்டி நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.சொ. சாந்தகுமார் பரிசு வழங்கினார். 
    இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹரிகரசுதன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com