எஸ்ட்ஸ் நோயாளிகள் 4,900 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டத்தில் 4,900 எஸ்ட்ஸ் நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விழிப்புணா்வு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயக்குமாா் உள்ளிட்டோா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயக்குமாா் உள்ளிட்டோா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 4,900 எஸ்ட்ஸ் நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விழிப்புணா்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயக்குமாா் தலைமை வகித்தாா். அவரது தலைமையில் பேரணியில் பங்கேற்ற செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள், மருத்துவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னா் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில், திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளில் முறையே 4,200 மற்றும் 700 போ் என மொத்தம் 4,900 போ் எய்ட்ஸ் பாதிப்பு காரணமாக, கூட்டு மருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. சரியான முறையில் கூட்டு சிகிச்சை மருந்தை எடுத்துக் கொண்டால், எஸ்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் வாழ்நாள்களை நீட்டிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் நோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (காசநோய்) மா.ராமசந்திரன், நிலைய மருத்துவ அலுவலா்(பொ) சு.திருநாவுக்கரசு, கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவ அலுவலா்கள் கலாவதி, மாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com