உலகப் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள்

உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் சார்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய  பேரணியை, திண்டுக்கல் சரக டிஐஜி சோஷி நிர்மல் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். ஏஎம்சி சாலை, பிரதான சாலை வழியாக சென்ற பேரணி, கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நிறைவுப் பெற்றது. 
பேரணியில் பள்ளி மாணவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல், நலப்பணிகள்  இணை இயக்குநர் மாலதி பிரகாஷ், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி வினோத், செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில்  என்எம்பி.காஜாமைதீன், ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணி முடிவுற்ற கோட்டைமாரியம்மன் கோயில் வளாகத்தில், உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியிலும், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக சிறந்த வாசகம் (ஸ்லோகன்) எழுதும் போட்டியிலும் வெற்றிப் பெற்ற 6 மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலைப் பள்ளி) ப.கிருஷ்ணன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். 
போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி: திண்டுக்கல் பிருந்தாவன் குடி மற்றும் போதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம், அனுகிரஹா சமுதாய கல்லூரி சார்பிலும், உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. போதை பொருள்களினால் தனி மனிதன் மட்டுமின்றி சமுதாய ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தேனி : தேனியில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைள் ஏந்தி தேனியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேனி- மதுரை சாலை, பெரியகுளம் சாலை வழியாக பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com