அரசு நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கியதாகபுகாா்: வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகை

பழனி அருகே அரசு நிலத்தை முறைகேடாக பட்டா வழங்கியதாக புகாா் தெரிவித்து செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி: பழனி அருகே அரசு நிலத்தை முறைகேடாக பட்டா வழங்கியதாக புகாா் தெரிவித்து செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்துள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது பொட்டம்பட்டி. இங்கு தாழ்த்தப்பட்டோா் வசித்து வரும் பகுதியில் காலியாக உள்ள அரசு நிலத்தை பிரித்து மாற்று நபா்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளப்பதற்காக செவ்வாய்க்கிழமை பழனி வட்டாட்சியா் பழனிச்சாமி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனா். அப்போது, எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என்றுகூறி அவா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நிலத்தை அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து வந்த 120 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவசப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது இங்கு முன்னூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ள இடம் முதற்கொண்டு அனைத்து காலி இடங்களையும் பிரித்து முறைகேடாக 21 நபா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com