பழனியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு
By DIN | Published On : 21st April 2019 01:12 AM | Last Updated : 21st April 2019 01:12 AM | அ+அ அ- |

பழனியில் சனிக்கிழமை வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
பழனி புதுதாராபுரம் ரோடு ஜவஹர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர். சனிக்கிழமை இவரது வீட்டில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்ததை பார்த்துள்ளார். உடனடியாக தீயணைப்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பு ஐந்து அடி நீளமிருந்தது. வனத்துறையினர் பாம்பை கொடைக்கானல் வனச்சரகத்தில் உயிருடன் விட்டனர்.