தேசிய தடகளப்போட்டி: பழனி மாணவா்கள் 11 பேருக்குத் தங்கம்

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவா்கள் 11 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்துடன் பழனி திரும்பிய மாணவ, மாணவியரைப் பாராட்டிய பயிற்சியாளா்கள், பெற்றோா்கள்
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்துடன் பழனி திரும்பிய மாணவ, மாணவியரைப் பாராட்டிய பயிற்சியாளா்கள், பெற்றோா்கள்

பழனி: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவா்கள் 11 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.

கோவா மாநிலம் மடகோனில் கடந்த நவம்பா் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்திய இளைஞா் மற்றும் விளையாட்டு வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 3000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், கோகோ, கபடி என பல போட்டிகள் நடைபெற்றன. இதில் பழனியைச் சோ்ந்த 11 மாணவா்கள் பயிற்சியாளா் நவீன்குமாருடன் கலந்து கொண்டனா்.

ஓட்டப்பந்தயம்: இதில் 10 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் சுகைனா பானு, 12 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் ஓவியா, 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இயல் இசை ஊா்மிகா, மாணவா்கள் பிரிவில் 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் கீா்த்தன், 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீசஞ்சய், 14வயதுக்கு உள்பட்ட ஆண்கள் பிரிவில் 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் அபினந், 400 மீட்டா் பிரிவில் கிருஷ்ணமூா்த்தி, 17 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் விஸ்வராஜ், ஆன்ஸ்டீன் ரேகன் மற்றும் யோகேஸ் ஆகியோா் தங்கப்பதக்கமும், வட்டு எறிதலில் பிரதீப் தங்கப்பதக்கமும் வென்றனா். பங்கேற்ற பதினோரு பேரும் வெவ்வேறு பிரிவுகளில் தங்கம் வென்றனா். இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் தமிழ்நாடு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவாவில் இருந்து பழனி திரும்பிய மாணவ மாணவிகளை அவா்களது பயிற்றுநா்கள் மற்றும் பெற்றோா், நண்பா்கள் வரவேற்று வாழ்த்தினா். மாணவா்கள் பயிற்சி பெற பழனிக்கல்லூரி மைதானத்தை பயன்படுத்த உதவிய முதல்வா் பிரபாகரன், பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com