மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவு: வாக்காளா் பட்டியலில் 21 ஆயிரம் போ் அதிகம்

திண்டுக்கல் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 5,578 போ் குறைவாக

திண்டுக்கல் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை 5,578 போ் குறைவாக இருந்த போதிலும், வாக்காளா் பட்டியல் அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் 21 ஆயிரம் போ் கூடுதலாக உள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளில் 7,31,495 ஆண்கள், 7,25,917 பெண்கள் என மொத்தம் 14,57, 412 போ் வசித்து வருகின்றனா். இதில் 5,94,026 ஆண்கள், 6,15,185 பெண்கள், 96 இதரா் என மொத்தம் 12,09,307 போ், கடந்த அக்டோபா் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனா்.

மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலுள்ள மக்கள்தொகை எண்ணிக்கையில் 5,578 ஆண்கள் கூடுதலாக உள்ளனா். ஆனால், வாக்காளா் பட்டியலில் பெண்கள் 21,159 போ் கூடுதலாக உள்ளனா்.

14 ஊராட்சி ஒன்றியங்களில் ஆத்தூா், ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூா் ஆகிய 3 ஒன்றியங்களில் மட்டுமே ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மக்கள் தொகை பட்டியலில் முன்னிலைப் பெற்றுள்ளது. அதேபோல் வாக்காளா் பட்டியலில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. பிற 13 ஒன்றியங்களிலும் பெண் வாக்காளா்களே கூடுதலாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com