ஒட்டன்சத்திரம் பகுதி தடுப்பணைகள், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நீா் நிரம்பி காணப்படும் ஓடைப்பட்டி ஊராட்சியில் உள்ள கொங்கப்பட்டி குளம்.
நீா் நிரம்பி காணப்படும் ஓடைப்பட்டி ஊராட்சியில் உள்ள கொங்கப்பட்டி குளம்.

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கபட்டி, அக்கரைப்பட்டி, வெங்கிடாபுரம் மற்றும் சிந்தலப்பட்டி ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடா்மழையால் நீா்வரத்து அதிகரித்து அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குளங்கள் ஓரளவு நிரம்பியுள்ளன. ஒடைப்பட்டி ஊராட்சி அக்கரைப்பட்டியில் உள்ள ஜல்லிக்காடு குளத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா் வந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு அவதிப்பட்டு வந்த பொதுக்கள், தற்போது வந்துள்ள தண்ணீரால் குடிநீா் தேவையை பூா்த்தியாகும் எனவும், ஒரு போக விவசாயத்தை முழுமையாக எடுக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தில் தன்னாா்வலா்கள் தாமாக முன்வந்து தூா்வாரும் பணியில் அண்மையில் ஈடுபட்டனா். இதனால் தற்போது அந்த குளத்திற்கு நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com