பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
   இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாரியம்மன், சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடி கோயிலை வலம் வந்து தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 
    கம்பத்தடியில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் முன்பு உள்ள கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். 
    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com