ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பழனி தைப்பூசப் பாதயாத்திரை பக்தர்களுக்காக கோவில்பட்டி திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில்  இலவச மருத்துவ முகாம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய இந்த முகாம், திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு தேவையான மருத்து, மாத்திரை, ஊசி, குளுக்கோஸ் மற்றும் சுளுக்கு, ரத்தக்கட்டு, மருந்து தடவி நீவி விடுதல், பேண்டேஜ் கட்டி விடுதல் போன்ற சேவைகள் 24 மணி நேரமும் செய்யப்படுகிறது. 
இந்த முகாம் தொடர்ந்து 34 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முகாமில் ஏராளமான பக்தர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com