ஜூலை 17 முதல் 21 வரை தொடர் சிந்தனையரங்கம்

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் தேசம் காப்போம், தேசத் தலைவர்கள் அறிவோம் என்ற தலைப்பில்

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் தேசம் காப்போம், தேசத் தலைவர்கள் அறிவோம் என்ற தலைப்பில் 2 ஆம் ஆண்டு தொடர் சிந்தனையரங்கம் ஜூலை 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
   இதுதொடர்பாக திண்டுக்கல் இலக்கிய களத்தின் தலைவர் மு.குருவம்மாள் தெரிவித்தது: உலகின் மிகப்பெரும் மதச்சார்பற்ற, பண்பாட்டு விழுமியங்களை அடையாளமாகக் கொண்ட இந்திய தேசத்தின் ஆளுமைகளை மக்கள் மன்றத்தில் நினைவு கூரவும், அவர்களது சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையிலும் இந்த தொடர் சிந்தனையரங்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஜூலை 17ஆம் தேதி திப்புசுல்தான், 18 இல் ரெட்டமலை சீனிவாசன், 19 இல் முத்துலட்சுமி ரெட்டி, 20 இல் பெண் கல்விக்கான முதல் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய் பூலே, ஜூலை 21 இல் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் வாழ்க்கை  வரலாறு, சமூகத்திற்கான அவர்களது பங்களிப்பு குறித்து கவிஞர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர். 
    திண்டுக்கல் பிச்சாண்டி கட்டடத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com