பலத்த காற்றுடன் சாரல் மழை: கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்
By DIN | Published On : 14th June 2019 07:19 AM | Last Updated : 14th June 2019 07:19 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக காற்றுடன் சாரல் பெய்து வருகிறது. வியாழக்கிழமை 3 ஆவது நாளாக பலத்த காற்று வீசியது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். கொடைக்கானலில் தொடர்ந்து காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் குளிர் அதிகமாக நிலவி வருகிறது. சுற்றுலா இடங்களில் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டதால் வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.