இன்ஜின் கோளாறு: இண்டர்சிட்டி விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதம்

இன்ஜின் கோளாறு காரணமாக, திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை  

இன்ஜின் கோளாறு காரணமாக, திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை  அய்யலூர் ரயில் நிலையத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
 திருச்சியிலிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இண்டர்சிட்டி விரைவு  ரயில்,  திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 8.10 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது இன்ஜின் கோளாறு காரணமாக அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 
பின்னர் அதே ரயிலின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு இன்ஜின் மூலம் அய்யலூர் ரயில் நிலையம் வரை பின்னாலிருந்து இயக்கப்பட்டது. 
அய்யலூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன், ரயில் நிறுத்தப்பட்டு பழுதான இன்ஜின் மாற்றப்பட்டு,  பின்னாலிருந்த இன்ஜின் முன் பகுதிக்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது. 
இன்ஜின் கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டர்சிட்டி விரைவு ரயில், திண்டுக்கல் நோக்கி மீண்டும் புறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com