பட்டர்  பீன்ஸ் விலை அதிகரிப்பு

பீன்ஸ் வகை காய்களின் வரத்து குறைந்துவிட்டதால், பட்டர் மற்றும் சோயா பீன்ஸ் விலை வழக்கத்தைவிட 50 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

பீன்ஸ் வகை காய்களின் வரத்து குறைந்துவிட்டதால், பட்டர் மற்றும் சோயா பீன்ஸ் விலை வழக்கத்தைவிட 50 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் பட்டர் பீன்ஸ், ரிங்(புஷ்) பீன்ஸ், சோயா பீன்ஸ், முருங்கை பீன்ஸ் உள்ளிட்ட பீன்ஸ் வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் அனைத்து வகையான காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால், விலையும் 10 முதல் 20 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. ஆனால், மலைப் பயிரான பீன்ஸ் ரகங்களின் விலை மட்டும் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளன. 3 மாதப் பயிரான பீன்ஸ் காய்கள், கடந்த பிப்ரவரி மாத சீசனில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது வரத்து குறைந்துவிட்டதால், மொத்த சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் கிலோ ரூ.140-க்கு பட்டர் பீன்ஸ் மற்றும் சோயா பீன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தில், இதே பீன்ஸ் வகை காய்கள், கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 
3 மாதங்களுக்கு இதே விலை நீடிக்கும்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் தற்போது பீன்ஸ் சாகுபடி செய்யும் பணி தொடங்கியுள்ளது. 3 மாத பயிரான பீன்ஸ், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சந்தைக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதுவரையிலும் இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது என மலைப் பயிர் காய்கறிகள் வியாபாரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com