தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழா
By DIN | Published On : 18th May 2019 07:01 AM | Last Updated : 18th May 2019 07:01 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அலுவலகத்தை சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிக்குமார் திறந்து வைத்தார். இதில், அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்னைகளுக்காக மாறி, மாறி தாக்கிக் கொள்வதை நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது திறமையை,, நதிகள் இணைப்பு போன்ற விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டங்களில் வெளிக் காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.