பழனி அரசு மருத்துவமனைக்கு நவீன "எண்டாஸ்கோபி' கருவி

பழனி அரசு மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான புதிய நவீன எண்டாஸ்கோபி கருவி

பழனி அரசு மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான புதிய நவீன எண்டாஸ்கோபி கருவி திங்கள்கிழமை நிறுவப்பட்டு, பொதுமக்களின பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பழனி அரசு மருத்துவமனைக்கு, பழனி  மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை  பெற்றுச் செல்கின்றனர். ஆனால், இங்கு காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான உரிய கருவிகள் இல்லாததால், மதுரை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்லவேண்டியிருந்தது. 
இதனால், ஏழை எளிய நோயாளிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான நவீன எண்டாஸ்கோபி கருவி நிறுவப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு இலவசமாகவும், காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும் நவீன முறையில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என, பழனி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பழனி அரசு தலைமை மருத்துவர் விஜயசேகர் தெரிவித்ததாவது: பழனி அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எண்டோஸ்கோபி என்ற கருவி மூலம் காது, மூக்கு, தொண்டையிலுள்ள பிரச்னைகளைக் கண்டறிய முடியும்.
 இதன்மூலம் எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு கட்டணம் எதுவுமில்லை. திங்கள்கிழமை முதல் இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com