கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரிப்பு: விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு

கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும் விலை சரிந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
அட்டுவம்பட்டியில் விளைந்த கேரட்டுகளை சுத்தம் செய்து தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.
அட்டுவம்பட்டியில் விளைந்த கேரட்டுகளை சுத்தம் செய்து தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.

கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும் விலை சரிந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கொடைக்கானலில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, செண்பகனூா், அப்சா்வேட்டரி, பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கேரட் விளைவிக்கப்படுகிறது.

கேரட் விளைவதற்கு 4 மாதங்களாகும். கடந்த ஜூலை மாதம் பயிரிடப்பட்ட கேரட் பயிா் நன்கு விளைந்து இருந்தது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் கேரட் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. சந்தைக்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ ரூ. 7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அறுவடை செய்யும் காலமான அக்டோபா் மாதத்தில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் கேரட் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் நிலங்களில் கேரட் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும், விலை குறைந்துள்ளதாலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

இது குறித்து கேரட் விவசாயிகள் கூறியது: கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாக இருந்தும், அறுவடைக் காலத்தில் பெய்த பலத்த மழையால் கேரட் சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும் விலையும் சரிந்துள்ளதால் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட கேரட் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com