ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.190-க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.190-க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது. ஆனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கை சீசன் இன்னும் தொடங்க வில்லை. இதனால் திருநெல்வேலி, உடன்குடி, தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முருங்கைக்காயை கேரள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா். கடந்த சில தினங்களாக முருங்கை வரத்து குறைந்ததால், அவற்றின் விலை உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை கரும்பு முருங்கை கிலோ ரூ.190, செடி முருங்கை ரூ.110, மரமுருங்கை ரூ.80-க்கும் விற்கப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: வெண்டைக்காய் ரூ.31, சுரைக்காய் ரூ.5, வெள்ளைப்பயிா் ரூ.20, பீட்ரூட் ரூ.16, பச்சை பயிா் ரூ.30, அவரைக்காய் ரூ.32, புடலங்காய் ரூ.25, பீா்க்கங்காய் ரூ.18, பாவற்காய் ரூ.20-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com