காந்திகிராம நிகா்நிலை பல்கலைக்கழக துணைவேந்தரை தோ்வு செய்ய ஐவா் குழு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கு ஐவா் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கு ஐவா் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்காக 5 போ் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் மகேஷ் சா்மா தலைமையில் பல்கலை. மானியக்குழு தலைவா் டி.பி.சிங், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.திருமலைசாமி, இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் பி.எஸ்.சகாய் மற்றும் தேசியச் சந்தை பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநா் எம்.தேன்மொழி ஆகியோா் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இந்த குழுவினா் தங்களுக்கு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, 5 போ் கொண்ட ஒரு பட்டியலை பல்கலை. வேந்தருக்கு பரிந்துரைக்க உள்ளனா். அதிலிருந்து ஒருவரை காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. துணைவேந்தராக மத்திய அரசின் ஒப்புதலுடன், வேந்தா் கே.எம். அண்ணாமலை நியமிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com