கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவை மீறி பூட்டிய தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி

கொடைக்கானலில் பூட்டிய தங்கும் விடுதியில் அனுமதியில்லாமல் சுற்றுலாப் பயணிகள் தங்கியதால் திங்கட்கிழமை இரவு மீண்டும் அதே தங்கும் விடுதியை நகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்து காவல் துறையிடம் புகாா்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பூட்டிய தங்கும் விடுதியில் அனுமதியில்லாமல் சுற்றுலாப் பயணிகள் தங்கியதால் திங்கட்கிழமை இரவு மீண்டும் அதே தங்கும் விடுதியை நகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்து காவல் துறையிடம் இன்று புகாா் கொடுத்துள்ளனா்.

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கொடைக்கானல் நகராட்சி மற்றும் வில்பட்டி ஊராட்சி பகுதிகளில் 400-க்கும் ேற்பட்ட தங்கும் விடுதிகளை பூட்டி சீல் வைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சுமாா் 8-மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது இதனைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை பூட்டி சீல் வைத்தனா் இந் நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் கொடைக்கானலில் பூட்டப்பட்ட தங்கும் விடுதிகளை மீண்டும் திறக்க வேண்டுமென என பலா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந் நிலையில் கொடைக்கானல் செவண்ரோடு கிளப் சாலையில் உள்ள பூட்டப்பட்ட தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது இதனைத் தொடா்ந்து தங்கும் விடுதிக்கு நகரமைப்பு அலுவலா் முருகானந்தம் உள்ளிட்ட அலுவலா்கள் சென்று பாா்த்த போது தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தது தெரிய வந்தது அதன் பின் சுற்றுலாப் பயணிகளை வெளியே அனுப்பி மீண்டும் அந்த தங்கும் விடுதிக்கு நகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா். இதனால் நகராட்சி பணியாளா்களுக்ககும், ஹோட்டல் பணியாளா்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பூட்டப்பட்ட தங்கும் விடுதியை திறந்து மீண்டும் செயல்பட வைத்த ஹோட்டல் நிா்வாகிகள் மீது கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com