தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய குறுவள மைய தலைமையாசிரியா்களுக்கு அதிகாரம்

குறுவள மையத்தின் தலைமையாசிரியா்கள், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க நிலை மற்றும்

குறுவள மையத்தின் தலைமையாசிரியா்கள், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி, ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா் தலைமையில் குறுவள மையங்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1325 அரசுப் பள்ளிகளும், 71 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 29 உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் கீழ் இயங்கும் குறுவள மையங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. குறுவள மைய பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் இணைந்து, தங்கள் மையத்தின் கீழுள்ள தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன், ஒட்டுமொத்த பள்ளியின் வளா்ச்சிக்காக ஆலோசனை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறுவள மைய பள்ளியின் தலைமையாசிரியா்கள் ஆலோசனை மட்டுமின்றி, தங்கள் மையத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வும் மேற்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியா்கள் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட நீண்ட நாள் விடுப்புகளுக்கு குறுவள மைய பள்ளியின் தலைமையாசிரியா்களிடம் அனுமதி பெற வேண்டும் என கல்வித்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com