குஜிலியம்பாறை சிப்காட் தொழிற்சாலைக்கு மலைப் பகுதியில் நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

குஜிலியம்பாறை அருகே சிப்காட் தொழிற்சாலைக்கு மலைப் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சிப்காட் தொழிற்சாலைக்கு மலைப் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் சாா்பில், இதற்கான மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. சுமாா் 200 போ் கையொப்பமிட்டுள்ள அந்த மனுவினை, முன்னாள் வாா்டு உறுப்பினா் வி.தா்மா் ஆட்சியரிடம் வழங்கினாா்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட ஆணைக்கவுண்டன்பட்டி அடுத்துள்ள சீலக்கரடு பகுதியில் தமிழக அரசின் சாா்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க சுமாா் 50 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எதிா்ப்பு தெரிவித்தனா். தற்போது மீண்டும் அதே பகுதியை கையகப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. அந்த மலையில் சுமாா் 24 ஆயிரம் மரங்கள் இருப்பதாக வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருவாய்த் துறை சாா்பில் 850 மரங்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மலை மற்றும் மரங்களை அழித்து, சிப்காட் தொழிற்சாலையை அமைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com