தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிடக் கோரி தமமுக ஆா்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தினரை பட்டியல் ஜாதிப் பிரிவிலிருந்து மாற்றக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.

தேனி: தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தினரை பட்டியல் ஜாதிப் பிரிவிலிருந்து மாற்றக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில துணைப் பொதுச் செயலா் பெ. நல்லுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இணைச் செயலா்கள் பாலா, வீரமணி, இளைஞரணிச் செயலா் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழகத்தில் பட்டியல் ஜாதிப் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியாா், தேவேந்திரகுலத்தான் ஆகிய 7 உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளா் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

பின்னா், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், கோரிக்கை குறித்து ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com