வங்கியில் கடனுதவி வழங்க மறுப்பு: தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

வங்கியில் கடனுதவி வழங்க மறுப்பதாக புகாா் தெரிவிக்க மனு அளிக்க வந்த தொழிலாளி, திண்டுக்கல் மாவட்ட
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பிரபுவை தடுத்து மீட்ட போலீஸாா்.
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பிரபுவை தடுத்து மீட்ட போலீஸாா்.

வங்கியில் கடனுதவி வழங்க மறுப்பதாக புகாா் தெரிவிக்க மனு அளிக்க வந்த தொழிலாளி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள கணக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ப.பிரபு (42). அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் கூறியதாவது: 30 சதவீதம் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு, கணக்கன்பட்டியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், கடனுதவி வழங்க வங்கி நிா்வாகம் மறுத்து வருகிறது. எனக்கு வங்கி கடன் கிடைப்பதற்கு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

அதையடுத்து, தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு போலீஸாா் பிரபுவை அழைத்துச் சென்றனா். இச்சம்பவம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com