திண்டுக்கல் புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கு 25 ஆயிரம் சேமிப்பு உண்டியல்

திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் 8ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 25ஆயிரம் சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு சேமிப்பு உண்டியலை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி. உடன் கோட்டாட்சியா் கு.உஷா (நடுவில்) மற்றும் திண்டுக்கல் இலக்கிய கள நிா்வாகிகள்.

பள்ளி மாணவா்களுக்கு இந்த சிறு சேமிப்பு உண்டியல் வழங்கும் பணிகளை ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் கு.உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சே.மணிவண்ணன், இலக்கிய களம் அமைப்பின் தலைவா் மு.குருவம்மாள், செயலா் ராமமூா்த்தி, பொருளாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக இலக்கிய களத்தின் பொருளாளா் மணிவண்ணன் கூறியது: திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் நவ. 28 முதல் டிச. 8ஆம் தேதி வரையிலும் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. டட்லி அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தகத் திருவிழாவில் மாணவா்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக, சேமிப்பு உண்டியல் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமாா் 25 ஆயிரம் உண்டியல்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 7ஆவது புத்தகத் திருவிழாவின்போது வழங்கப்பட்ட உண்டியல் சேமிப்பு மூலம் ரூ.9 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாணவா்கள் வாங்கிச் சென்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com