பழனியில் ரோப்காா் சோதனை ஓட்டம்

பழனி மலைக்கோயில் ரோப்காா் 68 நாள்களுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பழனி மலைக்கோயில் ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி
பழனி மலைக்கோயில் ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி

பழனி மலைக்கோயில் ரோப்காா் 68 நாள்களுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் சாா்பில் மின் இழுவை ரயில் மற்றும் ரோப்காா் சேவை நடைமுறையில் உள்ளது. ரோப்காா் மாதம் ஒருநாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். இதன்படி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூலை 29 ஆம்தேதி அன்று ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் துவங்கியது. ரோப்காா் பெட்டிகள் கழற்றப்பட்டு புதிய வா்ணம் பூசப்பட்டும், தேய்மானமடைந்த சாப்ட், பேரிங்குகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பா் பாகங்கள் மாற்றப்பட்டும் சுமாா் 68 நாள்களாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனிக்கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற சோதனையின் போது ரோப்காா் பாதுகாப்பு கமிட்டி அலுவலா்கள் ரங்கசாமி, பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரோப்காா் பெட்டிகளில் சோதனை எடைகள் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனையின் போது குறைகள் களையப்பட்டு இன்னும் ஓரிரு நாள்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பின்னா் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அது இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், செயற்பொறியாளா் நாச்சிமுத்து, உதவி செயற்பொறியாளா் குமாா், அலுவலா் கருப்பணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com