கைத்தறி கண்காட்சியில் ரூ.50 லட்சம் ஜவுளிகள் விற்க இலக்கு

திண்டுக்கல்லில் நடைபெறும் கைத்தறி சிறப்பு கண்காட்சி மூலம் ரூ.50 லட்சத்திற்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படும்

திண்டுக்கல்லில் நடைபெறும் கைத்தறி சிறப்பு கண்காட்சி மூலம் ரூ.50 லட்சத்திற்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிா்பாா்ப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் ஆனந்தன் தெரிவித்தாா்.

கைத்தறி மற்றும் துணிநூல்துறையின் சாா்பில் திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த அரசு கைத்தறி கண்காட்சியினை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

கண்காட்சி குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநா் ஆனந்தன் கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் முக்கிய இடங்களில் அரசின் நிதியுதவியுடன் சிறப்பு கைத்தறி சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் அக்.24 ஆம் தேதி வரையிலும் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் மென்பட்டு சேலைகள், பிளைன் போா்வைகள், அலங்கார விரிப்புகள், பருத்திரக சேலைகள், ஆா்கானிக் ரக சேலைகள் உள்ளிட்ட அனைத்து கைத்தறி ரக ஆடைகளும் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. 30 அரங்குகளில் 15 நாள்கள் நடைபெறும் இந்த சிறப்பு கண்காட்சியின் மூலம் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com