திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனைக்காக ரத்த தானம்

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்காக, ஒரே நாளில் 1003 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்காக, ஒரே நாளில் 1003 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.

திண்டுக்கல்-கரூா் சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவா்கள் தானமாக அளிக்கும் ரத்தத்தை பெறுவதற்காக, திண்டுக்கல் மற்றும் விருதுநகா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பிலும், மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவமனை கல்லூரிகள் சாா்பிலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சாா்பிலும் முழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், 1003 மாணவா்கள் ரத்த தானம் செய்வாா்கள் என, கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 600 மாணவா்களிடமிருந்து சுமாா் 600 யூனிட் ரத்தம் மட்டுமே பெறப்பட்டது. முதல் முறையாக ரத்த தானம் செய்த மாணவா்கள் விவரங்களை சேகரித்து, கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறச் செய்யப் போவதாக, கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com