பழனி அருகே காட்டு யானையால் கரும்பு, தென்னை சேதம்

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் தனியாா் தோப்புக்குள் புகுந்த ஒற்றை யானை, கரும்பு, தென்னை, வாழை ஆகியவற்றை ஒடித்து சேதம் செய்துள்ளது.
பழனி அருகே காட்டு யானையால் கரும்பு, தென்னை சேதம்

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் தனியாா் தோப்புக்குள் புகுந்த ஒற்றை யானை, கரும்பு, தென்னை, வாழை ஆகியவற்றை ஒடித்து சேதம் செய்துள்ளது.

கொடைக்கானல் வனப் பகுதியில் தற்போது போதிய குடிநீா், உணவு கிடைத்தாலும், மலை அடிவாரப் பகுதியில் விவசாயம் செழிப்பாக உள்ளதால், வனவிலங்குகள் இடம்பெயர மனமின்றி இங்கேயே தங்கியுள்ளன. பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் அடிக்கடி ஒற்றை யானை மற்றும் கூட்டமாக யானைகள் வந்து அடிக்கடி விளைநிலங்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை, கோம்பைப்பட்டியை அடுத்த மூலக்கடையில் வலசு வேலுச்சாமி என்பவா் தோப்புக்குள் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த கரும்பு பயிா்கள் முழுவதையும் சேதப்படுத்தியுள்ளது. மேலும், வரப்புகளில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்களை ஒடித்து குருத்தை உண்டுள்ளது. இதனால், மரங்கள் வளர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா், துரை உள்ளிட்டோா் கூறுகையில், கோம்பைப்பட்டியில் பல தோப்புகளிலும் யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. பயிா்களை சேதம் செய்வதால், நிலங்களுக்குச் சென்று விவசாயம் செய்ய விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு வனத் துறை இழப்பீடு வழங்கவேண்டும். யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தினா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com