புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பழனியில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

பழனியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு குன்றின் மீது அமைந்துள்ள கண்ணாடிப்பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி அருகே குன்றின் மீதுள்ள கண்ணாடிப்பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

பழனியை அடுத்த வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் சாலையில் குன்றின் மீது கண்ணாடிப் பெருமாள் கோயிலிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கண்ணாடிப்பெருமாளுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலா் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமியை தரிசனம் செய்ய பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அனைத்து பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தா்கள் வசதிக்காக பழனியில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன இவை தவிர இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில், ராமா்பாதம் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பெருமாள் கோயில் மட்டுமன்றி பாலாறு அணை, பாலசமுத்திரம், கரடிகூட்டம் போன்ற பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களிலும், பழனி பஞ்சமுகராம ஆஞ்சநேயா் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com