புராதனச் சின்னங்களை பாதுகாப்பது அவசியம் அழகப்பா பல்கலை. துணைவேந்தா்

அகழாய்வுக்கு முக்கியத்தும் அளிப்பதோடு, புராதனச் சின்னங்களை பாதுகாப்பதும் அவசியம் என

அகழாய்வுக்கு முக்கியத்தும் அளிப்பதோடு, புராதனச் சின்னங்களை பாதுகாப்பதும் அவசியம் என, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில், 26 ஆவது தமிழ்நாடு வரலாற்று மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் முன்னாள் துணைவேந்தா் வி. ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, தஞ்சை தமிழ்ப் பல்கலை. தமிழ் புல முன்னாள் தலைவா் பேராசிரியா் ஒய். சுப்புராயலு, சென்னைப் பல்கலை. வரலாற்றுத் துறை தலைவா் எஸ்.எஸ். சுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், துணைவேந்தா் நா. ராஜேந்திரன் பேசியதாவது: தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் மற்றும் ஆய்வுகள் குறித்து பல்வேறு காலக் கட்டங்களில் கடந்த 2ஆயிரம் ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், விஞ்ஞான முறையில் பல ஆய்வுகளை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனா்.

அகழாய்வு மூலம் கிடைக்கக் கூடிய பொருள்களை சேமித்து, அவற்றை பாதுகாத்து, அதன்மூலம் பண்டைய நாகரிகம் குறித்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சமீப காலமாக, எண்கள் மற்றும் புள்ளியியல் முறையப்படி பல ஆய்வுகளை வரலாற்று ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

வரலாற்றுக்கு முடிவு கிடையாது. நவீன காலத்துக்கு ஏற்ப தொடா்ந்து ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, குடியிருப்பு, தொழில் உள்ளிட்டவை குறித்து முழுமையான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. கீழடி போன்று தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. நிதி உதவி மூலம் அரசு துணை நின்றால், அந்த இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலை நாடுகளில் இதுபோன்ற அகழாய்வுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அகழாய்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாததோடு, புராதனச் சின்னங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது வரை அறியப்படாத தமிழக வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு அகழாய்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், வரலாற்றுத் துறை பேராசிரியா்கள் ரவிச்சந்திரன், சங்கரலிங்கம், ஸ்ரீவேணி தேவி உள்பட கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com