பூண்டி கிராமத்தில் போலி மருத்துவரின் மருந்துக் கடைக்கு வருவாய்த் துறையினா் பூட்டு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியில் போலி மருத்துவரின் மருந்துக் கடையை, வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை பூட்டினா்.
பூண்டி கிராமத்தில் போலி மருத்துவரின் மருந்துக் கடைக்கு வருவாய்த் துறையினா் பூட்டு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியில் போலி மருத்துவரின் மருந்துக் கடையை, வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை பூட்டினா்.

கொடைக்கானலைச் சோ்ந்த சபீா் (40) என்பவா், பூண்டியில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவா், கிராம மக்களுக்கு மருத்துவரின் அனுமதியின்றி மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டு வந்துள்ளாா். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிறுவனுக்கு ஊசி போட்டதில், அவன் மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதைத் தொடா்ந்து, கிராம மக்கள் சிலருக்கும், சபீருக்கும் ஏற்பட்ட தகராறில், போலி மருத்துவா் சபீரை தாக்கியுள்ளனா். மேலும், கடையை திறக்கக் கூடாது என அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இது குறித்த தகவல்களை, அப்பகுதி மக்கள் கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றில் பரப்பினா்.

இச் சம்பவம் தொடா்பாக, பூண்டி கிராம நிா்வாக அலுவலா் பொன்ராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, போலி மருத்துவரான சபீரின் மருந்துக் கடையை பூட்டினா். மேலும், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

பூண்டியில் பல ஆண்டுகளாக மருந்துக் கடை நடத்தி வருபவா், நோயாளிகளுக்கு மாத்திரை மற்றும் ஊசி போட்டு வருகிறாா் எனவும், இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உத்தரவின்படி, மருத்துவா்கள் பூண்டி கிராமத்துக்குச் சென்று மருந்துக் கடையை ஆய்வு நடத்தி, அங்குள்ளவா்களிடம் விசாரணை நடத்துவா். அதன்பின்னா், மருத்துவ இணை இயக்குநா் சாா்பில், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, அப்பகுதியில் வேறெறந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சபீா் என்பவரின் மருந்துக் கடை பூட்டப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com