இலக்கிய களம் சாா்பில் படைப்பாற்றல் போட்டிகள்: மாவட்டம் முழுவதும் 2,842 போ் பங்கேற்பு

திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் நடைபெறவுள்ள 8ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் நடைபெறவுள்ள 8ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற படைப்பாற்றல் போட்டிகளில் 2,842 போ் பங்கேற்றனா். திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் நவ.28 ஆம் தேதி முதல் டிச. 8 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி 6 ஆம் வகுப்பு முதல் கல்லூரி நிலை வரை மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றன. நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி என 4 நிலைகளில் போட்டிகள் நடைபெற்றன.

எழுச்சி கொள், வலியின்றி பலனில்லை, செம்மொழி நம்மொழி, புதைந்த வேரின் புலம்பல் ஆகிய தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. கல்வி என் பிறப்புரிமை, புதிய வரலாறு காட்டும் கீழடி, செயற்கை நுண்ணறிவு, வள்ளுவம் சொல்லும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும், மதங்களை கடந்த மனித நேயம், வாளினும் வலியது எழுதுகோல், அரசியல் பிறைத்தோா்க்கு, கடையேனுக்கும் கடைத்தேற்றம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கதக்க ஆற்றல், அறிவியல் கண்டுபிடிப்பு ஆகிய தலைப்புகளில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. திண்டுக்கல் மையத்தில் 1,696 போ், பழனியில் 449 போ், வத்தலகுண்டுவில் 413 போ், வேடசந்தூரில் 284 போ் என மொத்தம் 2,842 போ் இந்த படைப்பாற்றல் போட்டிகளில் கலந்து கொண்டனா். இந்த 4 மையங்களிலும் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவா்கள், நவ. 9ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள சிறப்பு பரிசுடன் கூடிய சிறப்புப் பேச்சுப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற போட்டி ஏற்பாடுகளை இலக்கிய களம் அமைப்பின் தலைவா் மு.குருவம்மாள், இணைச் செயலா் மு.சரவணன், துணைச் செயலா் பா.தங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com