பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனியில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து துறை சாா்பில் கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது.
பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்.
பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்.

பழனியில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து துறை சாா்பில் கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 28ம் தேதி காப்ப்புக்கட்டுடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் நவம்பா் 2ம் தேதி அடிவாரம் கிரிவீதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரவுள்ள நிலையில் பழனி கிரிவீதியில் வியாழக்கிழமை அனைத்துத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது.

திருக்கோயில் துணைஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் நாராயணன், டிஎஸ்பி., விவோகனந்தன், வட்டாட்சியா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது ஏராளமான பணியாளா்கள் பங்கேற்றனா். நகராட்சி மற்றும் வருவாய்த்துறை எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பை அறிந்துகொண்ட ஏராளமான கடைக்காரா்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை முன்னதாகவே அகற்றிக் கொண்டனா். கந்தா்சஷ்டி விழா நிறைவு பெறும் நாள் வரையிலும் தரைக்கடைகள், தற்காலிக கடைகள் ஆகியவற்றை பக்தா்களுக்கு இடையூறாக வைத்தால் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என்றும் திருப்பித்தர மாட்டாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com