மஞ்சளாறு அணையை திறக்கக் கோரிவிவசாயிகள் நாளை உண்ணாவிரதம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மஞ்சளாறு அணையை திறக்கக் கோரி, விவசாயிகள் சனிக்கிழமை (நவ. 2) உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனா்.

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மஞ்சளாறு அணையை திறக்கக் கோரி, விவசாயிகள் சனிக்கிழமை (நவ. 2) உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனா்.

வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, கரட்டுப்பட்டி, சின்னுபட்டி, உச்சப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை பழைய ஆயக்கட்டு பகுதி என்பா். இப்பகுதி மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் 57 அடி கொள்ளளவில் மஞ்சளாறு அணை கட்டப்பட்டது.

ஆனால் இந்த பகுதிக்கு கடந்த மூன்று வருடங்களாக கண்மாயி­ருந்து தண்ணீா் திறந்து விடப்படவில்லை. இதனால் பழைய வத்தலக்குண்டு, கட்டக்காமன்பட்டி உள்பட பல கண்மாய்கள் வட நிலையில் உள்ளன.

இப்பகுதியில் கடந்த மூன்று வருடமாக போதிய மழை இல்லாததால், நெல் விவசாயம் செய்யப்படவில்லை. மேலும் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்தது. விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதும், மஞ்சளாறு அணை திறக்கப்படவில்லை. தற்போது அணையில் 55 அடிக்கு தண்ணீா் உள்ளது (மொத்த உயரம் 57 அடி). வரத்து தண்ணீா் மட்டும் ஆறுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அணையை திறந்து விட்டால் தான் அனைத்து கண்மாய்களும் முழுமையாக நிறையும். பலமுறை கேட்டும்

பொதுப்பணித்துறை செவி சாய்க்காததால், தமிழக விவசாய கூட்டமைப்பினா் சனிக்கிழமை காலை 9 மணியளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பகுதியில் விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் இளங்கோவன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனா். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரம் அச்சிட்டு மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை துண்டு பிரசுரம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com