கொடைக்கானலில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

கொடைக்கானலில் ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையம் கொடைக்கானல் அன்னை தெரசா

கொடைக்கானலில் ஊட்டச்சத்து தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தின. 
     இந்த ஊர்வலமானது கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அண்ணாசாலை, கே.சி.எஸ். திடல், நகராட்சி பள்ளி சாலை, மூஞ்சிக்கல் வழியாக சென்றது. 
  இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், சத்தான உணவுகள் வழங்க வேண்டும், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோஷமிட்டு சென்றனர்.
   அதன்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
   இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுவாதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயசீலி, ஒருங்கிணைப்பாளர் உஷா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை விரிவுரையாளர் மங்கையர்க்கரசி, உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிறிஸ்டியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  இதில் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு, ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 
   மேலும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 
  இதேபோல ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com