கொடைக்கானல் காவல் நிலையத்தில் கூடுதலாக போலீஸார் நியமிக்கப்படுவர்: எஸ்.பி.

கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படுவர் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திவேல் தெரிவித்தார்.

கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படுவர் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திவேல் தெரிவித்தார்.
கொடைக்கானல் பகுதி காவல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், காவல் நிலைய வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை ஏரியையும் பார்வையிட்டார். அதன் பின் மரக்கன்றுகளை நட்டார். 
இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் டி.எஸ்.பி.ஆத்மநாதன், ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்.பி.சக்திவேல் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் உடனுக்குடன் காவல்துறையினர் பிடித்து வருகின்றனர். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏரிச்சாலை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மேல்மலைக் கிராமங்களில் உள்ள விடுதிகளில் கஞ்சா மற்றும் போதைக் காளான்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் வாகனச் சோதனைகள் தீவிரமாக்கப்படும். 
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் போது போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கூடுதலாக காவல்துறையினர் கொடைக்கானல் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்படுவர்கள்.
 மேலும் வெள்ளிநீர்வீழ்ச்சிப் பகுதிகளில் காவல்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்படும்.  பள்ளி மாணவர்கள் உரிமம் இல்லாமலோ அல்லது உரிய ரசீதுகள் இல்லாமல் பைக்குகள் ஓட்டினால் அவரது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வட்டக்கானல் பகுதிகளில் தங்கும் நேரங்களில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com