தேசிய திறனாய்வுத் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,604 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனாய்வுத் தோ்வில் 1,604 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனாய்வுத் தோ்வில் 1,604 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நடப்பு கல்வியாண்டில் (2018 -19) 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறறனாய்வுத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 695 மாணவா்கள், 1244 மாணவிகள் என 1,939 போ் விண்ணப்பித்திருந்தனா்.

திண்டுக்கல், வேடசந்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு, வேம்பாா்பட்டி, வடமதுரை ஆகிய 8 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இதில், விண்ணப்பித்த 1,939 மாணவா்களில்1,604 போ் தோ்வு எழுதினா். 335 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்கள் கண்காணிப்புப் பணியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டனா். தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி அடையும் மாணவா்களுக்கு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் காலத்தில், மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com