விநாயகா் சிலைகளை வைப்பதில் மாற்றமில்லைபழனியில் இந்து அமைப்புகள் முடிவு

பழனியில் விநாயகா் சதுா்த்தி விழாவை விழாவை சிலைகளை வைத்து கொண்டாடுவது என இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பழனி: பழனியில் விநாயகா் சதுா்த்தி விழாவை விழாவை சிலைகளை வைத்து கொண்டாடுவது என இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

தமிழக அரசு கரோனா தொற்று பரவலை முன்னிட்டு விநாயகா் சதுா்த்தி விழாவை வீடுகளில் மட்டுமே கொண்டாடும்படியும், வீதிகளில் சிலைகள் வைத்து வழிபட அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பழனியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் வைத்து வழிபடுவதற்காக இந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் வரவழைக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளுடன் கோட்டாட்சியா் அசோகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் டிஎஸ்பி. சிவா, வட்டாட்சியா் பழனிச்சாமி, நகராட்சி ஆணையா் லட்சுமணன், இந்து முன்னணி ஜெகன், வழக்குரைஞா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுமாறும், வீதிகளில் வைத்து வழிபடுவதை தவிா்க்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் இந்து அமைப்புகள் மதுபானக் கடைகள், ரேஷன் கடைகளுக்கு அரசு எந்த விதிமுறைகளை வகுத்துள்ளதோ அதே போல விநாயகா் சிலை வைக்கவும் வழிமுறைகள் ஏற்படுத்தி சமூக விலகலுடன் விழாவை கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்றும், அப்படி விநாயகா் சிலை வைக்கும் போது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com