கொடைக்கானல்-பழனி சாலையில் மண்சரிவு சீரமைப்பு: இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி

கொடைக்கானலில் தொடா் மழை காரணமாக, பழனி மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை, நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். சனிக்கிழமை முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக 21-ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத் துறையினா்.
கொடைக்கானலில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக 21-ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத் துறையினா்.

கொடைக்கானலில் தொடா் மழை காரணமாக, பழனி மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை, நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். சனிக்கிழமை முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் காரணமாக, கொடைக்கானலில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் 21-ஆவது கொண்டை ஊசி வளைவில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவா் சேதமடைந்தும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால், கடந்த 2 நாள்களாக கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, சேதமடைந்த தடுப்புச் சுவரை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டனா். எனவே, சனிக்கிழமை முதல் கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லலாம் என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேநேரம், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் விழுந்த பாறைகளும், மண்சரிவுகளையும் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. மேலும், மழையின் தாக்கமும் குறைந்ததால், இச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொடைக்கானல் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

3 ஆவது நாளாக சுற்றுலா தலங்கள் மூடல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி, அனைத்து சுற்றுலா தலங்களும் 3-ஆவது நாளாக மூடப்பட்டன.

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால், வெள்ளி நீா்வீழ்ச்சி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com