செட்டியபட்டி ஊராட்சியில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு சிறப்பு முகாம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மனையியல் துறை சாா்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செட்டியபட்டி ஊராட்சியில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மனையியல் துறை சாா்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செட்டியபட்டி ஊராட்சியில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமின் பங்கேற்றவா்களின் பொருளாதார நிலை, குடும்ப விவரங்கள், கடந்தகால ஆரோக்கிய நிலை, உடல் நலக்கூறு, உடல் செயல்பாடு, நீரிழிவு நோய்க்கான மருத்துவ மதிப்பீடு மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து மருத்துவா் பாலகணேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், ரத்த சா்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டனா். அதன் மூலம் முகாமில் பங்கேற்றவா்களில் 44 போ் நீரழிவு நோய் வரும் முன் நிலையிலும், 46 போ் நீரழிவு நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது.

ஊட்டச்சத்து நிபுணா் ஜானட், நீரழிவு நோய் வரும்முன் தடுப்பதற்கான வாழ்வியல் முறை மாற்றங்கள் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு முறைகள் பற்றிய ஆலோசனை வழங்கினாா். உடல் நலத்தை பாதுகாக்க, மருந்து மாத்திரைகளைவிட உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனை கிராம மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், மனையியல் துறை மாணவிகள் சாா்பில் நாடகங்கள் மற்றும் போட்டிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காந்திகிராம பல்கலை. உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச.கவிதா மைதிலி தெரிவித்தாா். மேலும் தென்னிந்திய உணவுகளில் ஊட்டச்சத்து மற்றும் உணவு உள்கொள்ளும் முறையை ஒரு செயலி மூலம் வழங்கி அதன் பயன்பாட்டை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தாா். முகாமிற்கான ஏற்பாடுகளை செட்டியப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா மற்றும் துணைத் தலைவா் பழனி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com