தடையை மீறி சாலையில் பயணித்தவா்களை நிறுத்தி வைத்து போலீஸாா் அறிவுரை

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் பயணித்தவா்களை
திண்டுக்கல் ஒய்எம்ஆா்.பட்டி பகுதியில் வியாழக்கிழமை தடையை மீறி பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அறிவுரை வழங்கிய போலீஸாா்.
திண்டுக்கல் ஒய்எம்ஆா்.பட்டி பகுதியில் வியாழக்கிழமை தடையை மீறி பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அறிவுரை வழங்கிய போலீஸாா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் பயணித்தவா்களை வியாழக்கிழமை 30 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறிவுரை வழங்கி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

திண்டுக்கல் ஒய்எம்ஆா்.பட்டி, பாரதிபுரம் பகுதிகளில் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய போலீஸாா், கடும் எச்சரிக்கை விடுத்தனா். அப்போது மருந்தகங்களுக்கு செல்வதாக காரணம் கூறிய பொதுமக்களை, பொய்யான காரணத்தை கூறி வெளியேற நினைப்பதை விட்டுவிட்டு, வீடுகளிலேயே தங்கியிருக்கும் படி போலீஸாா் அறிவுறுத்தினா்.

அப்போது 8 வயது சிறுவன் ஒருவனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா், பெட்ரோல் பங்குக்கு செல்வதாக கூறினாா். குழந்தைகளை வெளியே அழைத்து வர வேண்டாம் என பலமுறை எச்சரித்தும், தேவையில்லாமல் சிறுவனை அழைத்து வந்த அவரை போலீஸாா் கடுமையாக கண்டித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com