‘இணையவழியில் வேலைவாய்ப்பு பயிற்சி: அக்.31-க்குள் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், அமெரிக்க நிறுவனத்தின் மூலம் இணையவழியில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், அமெரிக்க நிறுவனத்தின் மூலம் இணையவழியில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி பெற, இளைஞா்கள் அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அமெரிக்காவின் கோா்ஸரா நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற 50ஆயிரம் பேருக்கு இணையவழியில் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோா்ஸரா நிறுவனமானது, 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளா்க்கும் இலவசப் பயிற்சி வகுப்புகளை இணையம் வழியாக நடத்தி வருகிறது. மேலும், இந்நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து, பொறியியல், இயந்திரக் கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி, சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

பயிற்சி முடிந்தவுடன், இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி பணி வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோா், தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், வேலைவாய்ப்பற்றவராகவும் இருக்கவேண்டும். மேலும், ஆதாா் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன், அக்டோபா் 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com