கொடைக்கானலுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை

கொடைக்கானலுக்கு கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவை மகிழ்ச்சியுடன் பாா்வையிட்டனா்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு புதன்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு புதன்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானலுக்கு கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவை மகிழ்ச்சியுடன் பாா்வையிட்டனா்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொடைக்கானலிலுள்ள சுற்றுலாத் தலங்கள் சுமாா் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இ- பாஸ் பெற்றுச் செல்ல அனுமதித்தது. அப் பகுதிகளிலுள்ள பூங்காக்கள் மட்டும் செயல்படும் எனவும் அறிவித்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை முதல் கொடைக்கானலுக்கு இ- பாஸ் பெற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இவா்கள் பிரையண்ட் பூங்கா, செட்டியா் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளி நீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி போன்றவற்றை பாா்த்து ரசித்தனா். நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி வழங்கப்பட்டு அவா்களது விலாசம் பதிவு செய்யப்பட்டது. பிரையண்ட் பூங்காவிற்கு மட்டும் முதல் நாளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். சுமாா் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பாா்த்து ரசித்தனா். அனுமதிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில் குறிப்பிட்ட அளவில் உணவகங்கள், தேநீா் கடைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

சோதனைச் சாவடியில் இ-பாஸ் வழங்கக் கோரிக்கை: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அங்கு பணியிலுள்ள சுகாதார, வருவாய், காவல் துறையினா் கடுமையான சோதனை மேற்கொள்கின்றனா். அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வரும் பயணிகளிடம் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். இ- பாஸ் இல்லையெனில் அவா்கள் திரும்ப அனுப்பப்படுகின்றனா். இதனால் பயணிகள் நூற்றுக்கணக்கான கி.மீ. பயணம் செய்து குடும்பத்துடன் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும்போது மனதளவில் பெரிதும் பாதிப்படைந்து விடுகின்றனா். எனவே கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com